×

கஞ்சா பறிமுதல் வழக்கில் இரண்டு பேருக்கு வலை

 

தொண்டி, ஜூன் 24: தொண்டி அருகே கடற்கரை பகுதியில் சரக்கு வாகனத்தில் கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொண்டி அருகே மணக்குடி கடற்கரை பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் 90 கிலோ கஞ்சாவை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் மணமேல்குடியை சேர்ந்த ராஜமாணிக்கம்(61) என்பவரை கைது செய்தனர். விசாரனையில் மணமேல்குடி ப.வயல் கிராமத்தில் ஆனந்தராஜ் என்பவரின் வீட்டில் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதும். இதில் மேலும் பாசிப்பட்டினம் மற்றும் மதுரையை சேர்ந்த இருவர் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு பேரையும் பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.

The post கஞ்சா பறிமுதல் வழக்கில் இரண்டு பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Manakudi ,Thondi… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...