×

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

 

நெல்லை, மே 28: திசையன்விளை அருகே கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். திசையன்விளை அருகே செல்வமருதூர் சுந்தர விநாயகம் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து இசக்கி(20). அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(22). இவர்கள் இருவரும் ஒரு பைக்கில் திசையன்விளை உபகார மாதாபுரம் பகுதியில் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வாகன சோதனை நடத்தி கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, இருவரையும் வழிமறித்து ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் வாகனத்தை சோதனையிட்டதில் ஒரு கிலோ கஞ்சா பிடிபட்டது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

The post கஞ்சா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Vetiyaanvilai ,Muthu Isakki ,Selvamarudhur Sundara Vinayagam Koil Street ,Kannan ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...