×

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை இயக்கம் துவக்கம்

 

பொன்னமராவதி, ஜூலை 4: பொன்னமராவதியில் ஓரணியில் தமிழ்நாடு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்திரவின்படி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர், தமிழக இயற்கைவளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இயக்கம் வீடு வீடாக சென்று மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி தெற்கு ஒன்றியத்தில் பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமையிலும், பேரூராட்சிப்பகுதியில் நகரச்செயலாளர் அழகப்பன் தலைமையிலும் வடக்கு ஒன்றியப்பகுதியில் மறவாமதுரை ஊராட்சி சடையம்பட்டியிலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டது.

The post ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை இயக்கம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Orani ,Ponnamaravathi ,Tamil Nadu ,DMK ,Chief Minister ,M.K. Stalin ,Pudukkottai ,South District ,Natural Resources Minister ,Raghupathi… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...