×

ஒரே நாளில் 58,000 பேர் பாதிப்பு: அதிவேகத்தில் சரியும் கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு படுவேகமாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 58,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். ஒமிக்ரான் எனும் புதுவகை வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா 3வது அலை ஏற்பட்டது. இது வேகமாக பரவக் கூடிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அதே போல், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போ்ல் இந்தியாவிலும் கடந்த மாதம் கொரோனா தொற்று படுவேகமாக அதிகரித்தது. தினசரி தொற்று மீண்டும் 2 லட்சத்தை எட்டியது.ஆனாலும், பெரும்பாலோனோருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாலும், இயற்கையாகவே பலர் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதாலும் 3வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், தற்போது தொற்று பரவல் வேகமாக சரியத் தொடங்கி உள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணியுடன் கடந்த 24 மணி நேரத்திற்கான நோய் பாதிப்பு, பலி எண்ணிக்கை குறித்து வெளியிட்ட புள்ளி விவரம்:* கடந்த 24 மணி நேரத்தில் 58,077 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 25 லட்சத்து 36 ஆயிரத்து 137 ஆக உயர்ந்துள்ளது.* நேற்று ஒரே நாளில் 657 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி 5 லட்சத்து 7 ஆயிரத்து 177.* நாடு முழுவதும் 92,987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இதுவரை 171.79 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.பரிசோதனை இல்லை இங்கி. அரசு அறிவிப்புதடுப்பூசி செலுத்திக் கொண்டு இங்கிலாந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த 2 ஆண்டாக விதிக்கப்பட்டிருந்த கடைசி கொரோனா கட்டுப்பாட்டை அது தளர்த்தி உள்ளது.  …

The post ஒரே நாளில் 58,000 பேர் பாதிப்பு: அதிவேகத்தில் சரியும் கொரோனா தொற்று appeared first on Dinakaran.

Tags : New Delhi ,India ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...