×

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

சூலூர், மே 20: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து பசுமை அமைப்புகளின் சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியின் உபயோகத்தினால் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் உண்டாகும் பல்வேறு விதமான பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், அன்றாட வாழ்வில் நெகிழிப் பயன்பாட்டை குறைப்பதற்கான எளிய மாற்று வழிகள் மற்றும் நெகிழி இல்லா வாழ்க்கையை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் நெகிழியை பயன்படுத்த தீமைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், பல்வேறு பசுமை அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள், சூலூர் மற்றும் பல்லடம் வட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Sulur ,New Bus Stand ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...