×

ஒன்றிய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், ஜூன் 19: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் பசவ ராஜ் படுகொலைக்கு நீதி விசாரணை நடத்திடகோரியும், மாவோயிஸ்டுகளையும், பழங்குடியின மக்களையும் படுகொலை செய்யும் நோக்கத்தில் நடத்தப்பட உள்ள ஆப்ரேஷன் காகர் திட்டத்தை கைவிடக் கோரியும், ஒன்றிய அரசை கண்டித்தும் திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் முரளி தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசாத், இணை ஒருங்கிணைப்பாளர் லெனின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : People's Power Organizations ,Union Government ,Tiruvarur ,Communist Party of India ,Maoist ,General Secretary ,Basava Raj ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...