×

ஒகேனக்கல் காவிரியில் மணல் திருடிய 3 பேர் கைது

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மணல் திருடப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ஐயப்பன் கோயில் பின்புறம் காவிரி ஆற்றில் மணல் திருடுவது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி, ஒகேனக்கல் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட ராணிப்பேட்டையை சேர்ந்த ராஜா(48), மூர்த்தி(27), மாதையன்(48) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு யூனிட் மணல் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டிராக்டர் உரிமையாளர் ரவிவை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஒகேனக்கல் காவிரியில் மணல் திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ogenakkal Cauvery ,Pennagaram ,Village Administrative Officer ,Porkodi ,Ogenakkal Cauvery river ,Dharmapuri district ,Cauvery river ,Ayyappan temple… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...