×

ஒகேனக்கல்லில் 27 மி.மீ. மழை

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை, குளிர்ந்த காற்று வீசியது. பின்னர், இரவு நேரத்தில் மாவட்டத்தில் மொரப்பூர், ஒகேனக்கல், பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரங்கள் மில்லி மீட்டரில் வருமாறு: பாலக்கோடு 6, மாரண்டஅள்ளி 24, ஒகேனக்கல் 27, மொரப்பூர் 3 என மொத்தம் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

The post ஒகேனக்கல்லில் 27 மி.மீ. மழை appeared first on Dinakaran.

Tags : Okenakkal ,Dharmapuri ,Dharmapuri district ,Morappur ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...