×

ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு

 

குளச்சல்: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் பல்வேறு நல திட்டங்களை குமரி மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாணியகுடி மீனவ கிராமத்தில் ரூ.8.17 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் அமைத்து மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கியது. புதிய சமுதாய நலக்கூடத்தை வாணியகுடி பங்குத்தந்தை சகாய ஆனந்த் திறந்து வைத்தார். ஐ.ஆர்.இ.எல் முதன்மை பொது மேலாளர் செல்வராஜன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் வாணியகுடி ஊர் தலைவர் அமலன், செயலாளர் சிம்சன், பொருளாளர் சீலன், துணை செயலாளர் நெல்சன், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் எனல்ராஜ், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், ஐ.ஆர்.இ.எல் நிறுவன பணியாளர்கள் உள்பட ஊர் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாணியகுடி ஊர் தலைவர் அமலன் சமுதாய நலக்கூடம் அமைத்து கொடுத்த ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

The post ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : IREL ,Kulachal ,Manavalakurichi ,Kumari ,Vaniyagudi ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...