×

ஏர்வாடி அருகே பைக்கில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 2 பேர் கைது

ஏர்வாடி, ஏப்.24: ஏர்வாடி அருகே 24 கிலோ புகையிலை பொருட்களை பைக்கில் பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். ஏர்வாடி எஸ்ஐ சுடலைகண்ணு மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது தளபதிசமுத்திரம் கீழூர் அருகே சந்தேகத்தின் பேரில் பைக்கில் நின்று கொண்டிருந்த பரப்பாடி ஆலங்குளம் கீழத் தெருவை சேர்ந்த ராம்தாஸ் (39), நாங்குநேரி வழியனேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜகுமார் (44) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்ததுடன் பைக்கில் சாேதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் இருவரும் பைக்கில் 23 கிலோ 580 கிராம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருட்களுடன் பைக்கை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், ராம்தாஸ், ராஜகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post ஏர்வாடி அருகே பைக்கில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Airwadi ,SI ,Sudalaikannu ,Thalathanasamudram ,Keezhur ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...