×

குற்றால அருவிகளில் குளிக்க 3 நாளுக்கு பின் தடைநீக்கம்

தென்காசி:  குற்றாலத்தில் மே மாத இறுதியிலேயே சீசன் துவங்கியது. கடந்த 3 நாட்களாக மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி என மூன்று அருவிகளிலும் தொடர்ந்து குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் விழுந்தது. நேற்று காலை ஓரளவு மழை ஓய்ந்திருந்தது. எனினும் வெயில் இல்லை. அதே சமயத்தில் தண்ணீரும் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. குறிப்பாக மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத்தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இருந்தபோதும் மூன்று நாட்களாக வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதால் மதியத்திற்கு பின் ஒவ்வொரு அருவியாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


எனினும் மையப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாதவாறு தடுப்புகளை அமைத்திருந்தனர். 3 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில்...