×

உ.பியில் 3 பேர் படுகொலை எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ. 28: உத்திரப் பிரதேசம் சம்பாவில் அம்மாநில போலீசாரால் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு நீதி கோரியும், எஸ்டிபிஐ சார்பில் மதுரையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கோரிப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, மதுரை வடக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பக்ருதீன், வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் தலைமை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் அபுதாகிர், மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக் பேசினர். விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பு நிர்வாகிகள் கதீசா, லைலத்து பீவி, கவிஞர் சமீமா உட்பட இணை அமைப்புக்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ நிர்வாகிகள் பாஷா, சைபுல்லாஹ், ராஜா உசேன் உள்ளிட்டோர் போலீசுாரின் நடவடிக்கையை கண்டித்து கோஷமிட்டனர். வடக்கு மாவட்ட வார்டு தலைவர் பீர் முகம்மது நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post உ.பியில் 3 பேர் படுகொலை எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI ,UP. Madurai ,Samba, Uttar Pradesh ,Madurai ,STBI South District ,Koripalayam, Madurai ,UP ,
× RELATED போலீசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்