×

போலீசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

 

பூதப்பாண்டி,டிச.16: பூதப்பாண்டி போலீசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் திட்டுவிளை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர தலைவர் சேக் மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் முகைதீன் நாகூர்மீரான், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், பேரூராட்சி கவுன்சிலர் நபீலாஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டுவிளை நகர செயலாளர் முகம்மது ரிஸ்வான் வரவேற்றார். சட்டமன்ற தொகுதி துணை தலைவர் அன்சார் தொடக்கவுரையாற்றினார்.

விவசாய தொழிலாளர் நல சங்க மாவட்ட செயலாளர் ரவி, மாநில பேச்சாளர் சாதிக் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முகமது ரிஸ்வானை பூதப்பாண்டி போலீசார் ஏதோ குற்றம் செய்தவர் போல், வீட்டிற்கு வந்து மிரட்டி சென்றதாகவும், போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டும் பேசினர். நகர துணை தலைவர் சேக் அப்துல்காதர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

The post போலீசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI ,Bhutapandi ,Thittuvilai ,president ,Sheikh Maideen ,District General Secretary ,Muhaidin Nagoremeeran ,Dinakaran ,
× RELATED சம்பலுக்கு செல்ல எதிர்க்கட்சி...