×

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 19.33 கோடியைக் கடந்தது: 41.50 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.50 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 41,50,640 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 19,33,64,222 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,57,02,697 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 82,361 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.33 கோடியைக் கடந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 61,640 பேருக்கும், பிரேசிலில் 49,603 பேருக்கும், இந்தோனேசியாவில் 49,509 பேருக்கும், இங்கிலாந்தில் 39,906 பேருக்கும், இந்தியாவில் 34,865 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது….

The post உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 19.33 கோடியைக் கடந்தது: 41.50 லட்சம் பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Corona ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை