- இடையர்காடு
- உமரிக்காடு
- ஏரல்
- தென் மாவட்ட
- அஇஅதிமுக
- எஸ்பி சண்முகநாதன்
- உமரி காமராஜ் இளைஞர் மன்றம்
- ஏரியல்…
- தின மலர்
ஏரல், ஜூன் 11: உமரிக்காட்டில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் இடையர்காடு அணி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பரிசு வழங்கினார். ஏரல் அருகேயுள்ள உமரிக்காட்டில் உமரி காமராஜ் இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்து முதலிடம் பிடித்த இடையர்காடு அணிக்கு ரூ.10 ஆயிரம், 2வது இடம் பிடித்த பழையகாயல் அணிக்கு ரூ.7 ஆயிரம், 3ம் இடம் பிடித்த உமரிக்காடு அணிக்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சிக்கு வை. கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன் முன்னிலை வகித்தார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், வை. யூனியன் முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வன், பூத் செயலாளர்கள் அரவிந்த், ஐயம்பெருமாள், நிர்வாகிகள் குணசேகரன், பார்வதி பாண்டியன், ஜெகன், கோட்டாளம், இளங்கோ, சுந்தர் மற்றும் கிரிக்கெட் அணி வீரர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post உமரிக்காடு கிரிக்கெட் போட்டியில் இடையர்காடு அணி முதலிடம் appeared first on Dinakaran.
