×

உப்பிலியபுரம் அடுத்த எரகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு

 

 

துறையூர், ஜூன் 19: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள எரகுடி கிராமப் பகுதி விளைநிலங்களில் கோடை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகள் விற்பனை செய்ய, விவசாயிகள் நலன்கருதி எரகுடியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஸ்டாலின் குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உப்பிலியபுரம் அடுத்த எரகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Erritpur ,Upliyapura ,Thuraiur ,Ergudi ,Upliyapuram Union ,Trichy district ,Thuraiur Assembly Constituency ,Erethik ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்