×

உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்: காங். கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தகவல்..!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரசை தயார்படுத்தும் வகையில், பிரியங்கா அம்மாநிலத்திற்கு அடிக்கடி சென்று பல்வேறு கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்று வருகிறார்.இதனையடுத்து, புலந்த்ஷரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் வரும் சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என ஏராளமான கட்சி தொண்டர்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்; எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.மேலும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தாய் ராம்ரதி உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார். இந்நிலையில், மாயாவதியை சந்தித்த, பிரியங்கா காந்தி அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்….

The post உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்: காங். கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தகவல்..! appeared first on Dinakaran.

Tags : Congress ,Uttar Pradesh ,Assembly Elections ,Cong. Party ,Secretary General ,Priyanka Gandhi ,Lucknow ,Congress party ,Assembly election ,
× RELATED உத்தரபிரதேச மாஜி பாஜ எம்எல்ஏ விடுதலை