தொண்டி, மே 5: தொண்டி பகுதியில் மக்கள் பொழுது போக்கும் விதமாக உடற்பயிச்சி கூடத்துடன் கூடிய பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பகுதி மக்கள் பொழுது போக்குவதற்கு எவ்வித இட வசதியும் இல்லாமல் அதிக பொருட்செலவு செய்து பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். அதேபோல் உடற்பயிற்ச்சி கூடமும் இல்லாமல் நடைபயிறச்சிக்கு கூட காலை மற்றும் மாலை நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து செல்கின்றனர்.
அதனால் தொண்டியில் உடற்பயிற்ச்சி கூடம், நடை மேடையுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும். சாலையில் நடைபயிற்சிக்கு செல்லும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது. பொழுதுபோக்கிற்கு கடற்கரை பகுதிக்கு தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் செல்கின்றனர். அங்கு எவ்வித வசதியும் இல்லாததால் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே தொண்டியில் உடற்பயிற்ச்சியுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும்.
இது குறித்து தொண்டி சீனி ராஜன் கூறியது, தொண்டியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். போதிய வசதி இல்லாமல் ரோட்டில் நடக்கின்றனர். பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால் இப்பகுதி மக்கள் பண்டிகை மற்றும் விடுமுறை தினங்களில் குற்றாலம், அரியமான், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக பொருட்செலவு செய்து செல்கின்றனர். அதனால் இந்நிலையை போக்க தொண்டியில் உடற்பயிற்சி கூடம், நடைமேடை, சிறுவர்கள் விளையாடும் உபகரணங்களுடன் கூடிய பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post உடற்பயிற்சி கூடத்துடன் பூங்கா தொண்டி மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.
