- ஸ்டாலின் முகாம்
- வத்திராயிருபு
- குன்னூர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி
- வத்திராயிருப்பு ஒன்றியம்
- விருதுநகர் தெற்கு மாவட்டம்
- வயட்டி, குன்னூர்...
- தின மலர்
வத்திராயிருப்பு, ஜூலை 17: வத்திராயிருப்பு அருகே நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்தனர். விருதுநகர் தெற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் வளையட்டி, குன்னூர் ஊராட்சி பகுதி மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும் மகளிர் உதவி தொகைக்கான மனுக்களையும் அளித்தனர். முகாமில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை ஒன்றிய செயலாளர் முனியாண்டி செய்திருந்தார். இந்த முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்மன்ற பார்வையாளர் ராமர், மாவட்ட கழக துணை செயலாளர் ஆர்.வி.கே.துரை, ஒன்றிய பொருளாளர் மதிவாணன் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுடன் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.
