×

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

சாத்தான்குளம், ஏப்.22: புத்தன்தருவை பள்ளியில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மாணவர்கள், ஈகை தினத்தை கொண்டாடும் வகையில் இஸ்லாமிய மாணவர்களுக்கு புத்தாடை வழங்கினர். சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடும் வகையில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் கிறிஸ்தவ மாணவ- மாணவிகள் இணைந்து தங்களின் மனமார்ந்த அன்பளிப்பு மூலம் அதே பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் முகமது ரிஸ்வான் என்ற மாணவனுக்கும், தஸ்லிம் என்ற மாணவிக்கும் ஈஸ்டர் திருநாள் பரிசாக புத்தாடை வழங்கி மத நல்லிணக்கத்தை பள்ளியில் மகிழ்வுடன் கொண்டாடினர். புத்தாடை வழங்கிய மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு ஆண்ட்ரூஸ் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Easter ,Sathankulam ,Putthantharuvai School ,Eid ,Putthantharuvai Panchayat Union Middle School ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...