×

இருவருக்கு சிறை தண்டனை

 

மதுரை கூடல்நகர் போலீசார் கடந்த 2022 ஜூலை 11ல் நடத்திய வாகன சோதனையில், டூவீலரில் 1.500 கிலோ கஞ்சா கடத்தி வந்த மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(34), பாசிங்காபுரம் அஜய்(23) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் குற்றச்சா்ட்டுகள் உறுதியானதால், கார்த்திக் மற்றும் அஜய் ஆகிய இருவருக்கும் தலா 4 மாத சிறை தண்டனை மற்றும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

 

The post இருவருக்கு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Madurai Kudalnagar police ,Karthik ,Jaihindpuram ,Madurai ,Ajay ,Pasingapuram ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...