×

இருக்கன்குடியில் விருந்து மண்டபங்கள் கட்டுமான பணி விறுவிறு

சாத்தூர், நவ. 20: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.2.50 கோடி மதிப்பில் விருந்து மண்டபங்கள் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கான விருந்து மண்டபங்களை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதனால் பக்தர்கள் அப்பகுதியில் இருக்கும் புளிய மரங்களின் நிழலில் விருந்து கொடுத்து வந்தனர்.

பக்தர்கள் சிரமத்தை போக்கும் விதமாக விருந்து மண்டபங்கள் அமைக்க கோயில் நிர்வாகம் சார்பில் நிதி கோரப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையையேற்று இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கு விருந்து மண்டபங்கள் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். இக்கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

The post இருக்கன்குடியில் விருந்து மண்டபங்கள் கட்டுமான பணி விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Istankudi ,Chatur ,Istankudi Mariamman Temple ,Itankudi Mariyamman ,Itankudi ,
× RELATED பாதுகாப்பு இல்லாத மாணவிகள் விடுதி