×

இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை

சாத்தூர், நவ.17: சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற இருக்கன்குடிக்கு வாகனங்கள், அரசு தனியார் பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இருக்கன்குடியில் பேருந்து நிலையம் இல்லாததால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாலையில் நின்று பேருந்தில் செல்கின்றனர். சாலையில் நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இருக்கன்குடியில் பேருந்து நிலையம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Istangudi ,Chatur ,Itankudi ,Mariamman ,Virudhunagar ,Sivakasi ,
× RELATED பாதுகாப்பு இல்லாத மாணவிகள் விடுதி