×

இரண்டு கோடியில் 7 சாலை பணிகள் மேயர் ஆய்வு

 

காரைக்குடி, மே 30: காரைக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் சாலை பணிகளை மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை, ஆணையர் என்.சங்கரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை கூறுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியில் தமிழ்நாடு சீரிய முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. அனைத்து துறையும் சீரான வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

முதல்வரின் ஒவ்வொரு திட்டமும் மக்களை நேரடியாக சென்றடையும் விதத்தில் உள்ளது. இம் மாநகராட்சிக்கு தேவையான நிதிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் அரசிடம் பெற்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அந்தவகையில் போக்குவரத்து அதிகளவில் உள்ள சாலைகள் போட திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மக்களின் தேவை அறிந்து அதிக பயன்பாடு உள்ள 7 சாலைகள் போட ரூ.2 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

பணிகள் மிகவும் தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறோம். மேலும் மக்களின் தேவைகள் குறித்து என்னிடம் எப்போது வேண்டும் என்றாலும் நேரில் வந்து தெரிவிக்கலாம். மக்களுக்கு பணிகள் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்வதே எங்கள் இலக்கு’’ என்றார். அப்போது மாமன்ற உறுப்பினர் கண்ணன், ஒர்க்கிங் இன்ஸ்பெக்டர் ஹரி, டிமேன் மணிகண்டன், வட்ட செயலாளர் பாண்டி உள்பட பலர் இருந்தனர்.

The post இரண்டு கோடியில் 7 சாலை பணிகள் மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Corporation ,Mayor S. Muthuthurai ,Commissioner ,N. Sankaran ,Karaikudi Corporation ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...