×

இந்து மகா சபா சார்பில் திருச்செந்தூரில் வீரசாவர்க்கர் பிறந்த தினம்

 

திருச்செந்தூர், மே 29:திருச்செந்தூரில் வீரசாவர்க்கரின் 142வது பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட அகில பாரத இந்து மகா சபா சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் எதிரில் வைக்கப்பட்டிருந்த வீரசாவர்க்கர் படத்திற்கு இந்து மகா சபா நகர தலைவர் மாயாண்டி தலைமையில் மாநில செயலாளர் ஐயப்பன் வீரவணக்கம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அப்போது இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வீரசாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணபெருமாள், ஒன்றிய தலைவர் ஒளிமுத்து, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கிருஷ்ணன், பிரித்திவிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்து மகா சபா சார்பில் திருச்செந்தூரில் வீரசாவர்க்கர் பிறந்த தினம் appeared first on Dinakaran.

Tags : Veerasawarkar ,Tricendur ,Hindu Maha Sabha ,Tiruchipundur ,Tiruchendur ,All India Hindu Maha Sabha ,Southern District ,Iron Arch ,Veerasavarkar ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...