நாகை : நாகை மீனவர்கள் 19 பேரை ஆந்திரா மீனவர்கள் சிறைபிடித்தனர். அவர்களை உடனே மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம் மீனவர்கள் மனு அளித்தனர். நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட 64 மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான அக்கரைப்போட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் நாகை கலெக்டர் சுரேஷ்குமாரை நேற்று நேரில் சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 7ம் தேதி இரவு நாகை துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகுகள் ஆந்திரா கடல் பகுதியில் மீன் பிடித்தபோது நேற்று (12ம் தேதி) அதிகாலை ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் சிலர் 2 விசை படகுகளையும், அதில் இருந்த மீனவர்களையும் சிறைபிடித்து அவர்களது கடற்கரை பகுதிக்கு இழுத்து சென்று சிறை வைத்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள அக்கரைப்பேட்டையை சேர்ந்த முருகன், ஏலாட்சியம்மாள் ஆகியோரின் விசை படகு மற்றும் முருகன் விசை படகில் சென்ற மீனவர்கள் எழிலரசன், கோபி, நெப்போலியன் உட்பட 19 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
