கோவை,மே30: கோவை மருதமலை சாலை பகுதியில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் நேற்று தமிழ் வளர்ச்சித் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பாலகத்தின் இரண்டு புறங்களிலும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்பலகை வைத்து தமிழில் பெயர் பலகை இல்லாதது கண்டறியப்பட்டது. பெயர் பலகையினைத் தமிழில் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆவின் \”ஹை-டெக் பார்லர் என்பதனைத் தமிழில் \”ஆவின் உயர்நுட்பப் பாலகம் \” என்று மாற்றி அமைக்கும்படியும் ஆவின் பொது மேலாளர்,உதவி பொது மேலாளர் ஆகியோர்களிடம் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் வலியுறுத்தினர்.
மேலும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆவின் மேலாண்மை இயக்குநருடன் அலைபேசி வழியே தொடர்புகொண்டு இத்தகவலைப் பகிர்ந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, உடனடியாக \”ஆவின் உயர்நுட்பப் பாலகம் \” என்று தமிழில் பெயர்பலகை மாற்றப்பெற்றது. அரசு நிறுவனங்கள் விரைந்து பெயர்பலகைகளைத் தமிழில் மாற்றுவதைப் போல வணிக நிறுவனங்களும் தங்களின் பெயர் பலகைகளைத் தமிழில் மாற்றி அமைத்திடுவதற்கும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கவேண்டுமெனத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந.அருள் கேட்டுக்கொண்டுள்ளார்.
The post ஆவின் பாலகத்தில் இருந்த ஆங்கில பெயர் பலகை தமிழில் மாற்றம் appeared first on Dinakaran.