×

ஆவின் ஐஸ்கிரீம் விநியோகம் செய்ய விண்ணப்பிக்கலாம்

 

விருதுநகர், அக்.2: விருதுநகர் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை விநியோகம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு விவரங்கள் அறிய திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.17. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9894204423, 784595109, 9629178789 என்ற ஆவின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஆவின் ஐஸ்கிரீம் விநியோகம் செய்ய விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Aavin ,Virudhunagar ,General Manager ,Virudhunagar District ,Virudhunagar District Cooperative Milk Producers Union ,Dinakaran ,
× RELATED குமரி அழகப்பபுரம் அருகே பேருந்தை...