×

3-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து  அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.  157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற விகிதத்தில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.


Tags : D20 ,England ,India , 3rd T20: England win by 8 wickets against India
× RELATED 2வது டி.20 போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி