* அரைஇறுதியில் படோசா
பெய்ஜிங்கில் நடைபெறும் சீனா ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டியில் நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா(26வயது, 19வது ரேங்க்) 6-1, 7-6(6-4) என்ற நேர் செட்களில் சீனாவின் சுயாய் ஜாங்கை(35வயது, 30வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
* அசாரூதினுக்கு நோட்டீஸ்
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின். தனது பதிவிக் காலத்தில், அங்குள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் அரங்கின் மேம்பாட்டு பணிகளை செய்ததில் சுமார் 20 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அசாரூதீனுக்கு அமாலக்கத் துறை ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
* தமிழ்நாடு வெற்றி
அரியானாவில் அகில இந்திய அளவிலான பிசிசிஐ யு19 பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதில் நேற்று நடந்த பி பிரிவு லீக்ஆட்டத்தில் தமிழ்நாடு-விதர்பா அணிகள் மோதின. அதில் விதர்பா 20ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 82ரன் எடுத்தது. தமிழ்நாடு 18.5ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 83ரன் எடுத்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
* இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுக்கு இடையில் பல்வேறு மோதல்கள் தொடரும் நிலையில் ‘அக்.25ம் தேதி சிறப்பு பொதுக்குழு நடைபெறும்’ என்று அதன் தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.