- அலவயல்
- பொன்னமராவதி
- அலவயல் தனியார் பள்ளி
- ஆலவயல் தனியார் கல்வி அறக்கட்டளை
- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை
- புதுக்கோட்டை மாவட்ட தொலைநோக்கு பார்வை
- இழப்பு தடுப்பு சங்கம்…
- தின மலர்
பொன்னமராவதி, மே 26: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் தனியார் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.
ஆலவயல் தனியார் கல்வி அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பார்வை.இழப்பு தடுப்பு சங்கம் ஆகியன இணைந்து நடததிய ஆலவயலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு, பள்ளியின் நிறுவனர் மாஸ்.மாதவன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் கல்யாணி முன்னிலை வகித்தார். ஆலவயல் மிராஸ் அழகப்பன் அம்பலம் முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினரால் 250 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 61 பேர் அறுவை சிகிச்சைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
The post ஆலவயலில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.
