×

ஆர்.பி.ஏ சென்ட்ரல் பள்ளியில் திறன் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சி

 

சாமியார்மடம், ஜூன் 16: மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ சென்ட்ரல் பள்ளியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பரிந்துரையின்படி ஆசிரியர்களின் புத்தாக்கத் திறனை மேம்படுத்தும் விதமாக ‘திறன் மேம்பாட்டுத் திட்டம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளி தாளாளர் பிரான்சீஸ், பள்ளியின் கல்வி இயக்குநர் லாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஷீலாகுமாரி வரவேற்றார்.

சி.பி.எஸ்.இ வாரியத்தின் பயிற்சியாளரும் பேரிடர் மேலாண்மை இயக்குநருமான முனைவர் பவானி சங்கர் சுப்பிரமணியன் பங்கேற்று ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்கினார். இணை பயிற்சியாளர் ரஞ்சனா எஸ்.நாயர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

The post ஆர்.பி.ஏ சென்ட்ரல் பள்ளியில் திறன் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : RBA Central School ,Samiyarmadam ,Mamutkadai ,Central Board of Secondary Education ,CBSE ,Francis ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...