×

ஆம்புலன்ஸ் ஊழியர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜூன் 6: சிவகங்கை சிவகங்கை அரண்மனை வாசல் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் (சிஓஐடியு) சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் 112 ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு டூவீலர் ஆம்புலன்ஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் 176க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தொழிலாளர் விரோதத்துடன் பாரபட்சமாக செயல்பட்டு வரும் மாவட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான 108 ஆம்புலன்ஸ்களை உடனடியாக பழுது பார்க்க வேண்டும்.

தரமற்ற ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி அவசர அழைப்புகள் வழங்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதுள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் பேசினார். இதில் ஏராளமான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆம்புலன்ஸ் ஊழியர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Ambulance Workers ,COITU ,Sivaganga Palace gate ,Sivaganga district ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...