- ஆம்னி பேருந்து
- மதுரை
- மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம்
- மாட்டுத்தாவணி காவல் நிலையம்
- பேருந்து
- தின மலர்
மதுரை, ஜூலை 30: மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்ஸ்டாண்டில் செயல்பட்டு வரும் தனியார் பஸ் நிறுவன டிரைவர் பாலகருப்பையா மற்றும் கிளீனர் ஆகியோரை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாட்டுத்தாவணி காவல்நிலைய போலீசார், பஸ் நிறுவன உரிமையாளர் ராஜசேகர் உள்ளிட்ட 8 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய 5 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரி, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக நேற்று மதுரை கோ.புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post ஆம்னி பஸ் டிரைவர், கிளீனரை தாக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.