×

ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு 1300 டன் உரம் வருகை

 

தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இந்த நிலையில் நேற்று ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சரக்கு ரயிலில் 1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு நேற்று வந்து இறங்கியது. பின்னர் உர மூட்டைகள் லாரிகள் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

The post ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு 1300 டன் உரம் வருகை appeared first on Dinakaran.

Tags : Andhra ,Thanjavur ,Tamil Nadu ,Matur dam ,Thanchi district ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் இருந்து வேனில் கடத்தி...