×

ஆத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா

ஆத்தூர், ஜூலை 2: ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன், கருப்பணார், கருப்பையா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா கடந்த 21ம் தேதி பூ போடுதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வந்தன. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று காலையில் உருளுதண்டம், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு தேரில் முத்துமாரி அம்மனை வைத்து, ஆதிபராசக்தி என முழக்கத்தோடு ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்து சென்றனர். நிகழ்ச்சியில் காட்டுக்கொட்டை, மஞ்சினி, ஆத்தூர், நடுவலூர், ஒதியத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ஆத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Aathur Muthumariamman temple ,Aathur ,Muthumariyamman ,Karuppanar ,Karupiya ,Temples ,Brangamadevi ,Avani ,Athur Muthumariamman Temple ,
× RELATED ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்