- ஆத்தூர் பேரூராட்சி
- ஆறுமுகநேரி
- உலக புவி நாள்
- 15வது வார்டு வலம் உத்திகா பூங்கா
- டவுன் பஞ்சாயத்து
- தலைவர்…
- தின மலர்
ஆறுமுகநேரி, ஏப். 25: ஆத்தூர் பேரூராட்சியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஆத்தூர் பேரூராட்சி சார்பில் உலக பூமி தினத்தையொட்டி 15வது வார்டு வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் கமால்தீன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) பாபு முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கேசவன், சிவா, அருணா குமாரி உள்பட அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
The post ஆத்தூர் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.
