×

ஆதரவற்ற மூதாட்டியை அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை

 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நேற்று ராஜா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு மனநலம் பாதித்த நிலையில் உறவினர்கள் யாரும் இல்லாத மூதாட்டி ஒருவர் இருப்பதாக ராஜா எம்எல்ஏவிடம் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியை ராஜா எம்எல்ஏ சந்தித்தார். அவரிடம் தனது பெயரை ருக்கு என கூறிய அவர், மற்ற எந்த விவரங்களும் தெரியவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்ட ராஜா எம்எல்ஏ அந்த மூதாட்டியை அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

The post ஆதரவற்ற மூதாட்டியை அரசு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Raja MLA ,Sankarankovil Government Hospital ,Raja… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...