×

ஆசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

 

விருதுநகர், மே 31: ஆசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஆசிய அளவிலான கராத்தே போட்டி இலங்கை சுகந்ததாசா விளையாட்டு அரங்கில் கடந்த மே 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெற்றது. கராத்தே போட்டி வயது, எடை பிரிவுகள் அடிப்படையில் 80 பிரிவுகளாக நடைபெற்றது. விருதுநகர் அருகில் உள்ள எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்த மாணவி ஷிவானி , மித்ரன், ஹரிஷ்ராகவ், மாரிச்செல்வம் ஆகியோர் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்றனர்.

The post ஆசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Asian Karate Championship ,Virudhunagar ,Asian level Karate Championship ,Sri Lankan Sugandhadasah Sports Hall ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...