×

ஆக்டோபஸ் கரங்களால் அதிமுகவை பாஜ அழித்துவிடும்

 

திருச்சி,ஜூன் 27: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திருச்சியில் நிருபர்களிடம் கூறுகையில்,
திமுக கூட்டணியில் பிளவு வராதா, திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறி அதிமுக உடன் இணையாதா என எதிர்ப்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் சலசலப்பு உள்ளது என அதிமுக கூறுவது அந்த ஏமாற்றத்தின் விளைவாக வரும் கருத்து. இந்தியா முழுவதும் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளை பாஜக தன் உங்களுடைய ஆக்டோபஸ் கரங்களால் அழித்துவிட்டது. அந்த நிலை அதிமுகவிற்கு வந்துவிடக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம். அதிமுக மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள கட்சி அந்த கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து அழிந்து விடக்கூடாது என்கிற கவலை எங்களுக்கு உள்ளது. அந்த எச்சரிக்கையை தான் நாங்கள் திரும்ப திரும்ப கூறி வருகிறோம். அதிமுக வை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வர வேண்டும் என்றார்.

The post ஆக்டோபஸ் கரங்களால் அதிமுகவை பாஜ அழித்துவிடும் appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Trichy ,Marxist Party ,State Secretary ,Shanmugam ,DMK ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்