×

அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

 

அரியலூர்,செப்.2: அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு கருத்தரங்கம் வரும் 13ம்தேதி நடக்கிறது. அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கு சுய தொழில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 13ம்தேதி (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.

ஆதலால் அரசு துறைகளை சார்ந்த மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு அத்துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். தொழில் குறித்த விவரங்கள், நிதி ஆதாரங்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதால் இத்தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, கேட்டுக் கொண்டுள்ளார்.

The post அரியலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur District ,Ariyalur ,Ariyalur District… ,
× RELATED வங்கி கடனுதவிக்கும் ஏற்பாடு: புதிய தொழில் முனைவோராக பயிற்சி