×

அரியலூர் நகர்மன்ற கூட்டம்

அரியலூர், ஏப்.18: அரியலூர் நகர்மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் (பொ) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு, தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அரியலூர் நகர்மன்ற கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur Municipal Council Meeting ,Ariyalur ,Municipal ,Council ,Ariyalur Municipality ,Municipal Council ,Shanthi Kalaivanan ,Vice Chairman ,Kaliyamoorthy ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...