×

அரியலூர் கலெக்டர் படத்துடன் பெயரிட்ட பொய்யான பேஸ்புக் பக்கத்தில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்

அரியலூர் ஜூன் 7: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசின் செய்திகள் வெளியிடுவதற்கு பேஸ்புக்கில் மாவட்ட கலெக்டர் அரியலூர், டிவிட்டர் இன்டாகிராமில் மாவட்ட கலெக்டர் அரியலூர் ஆகிய சமூக ஊடக பக்கங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்து, மாவட்ட கலெக்டர் பெயருடன் (பி.ரத்தினசாமி ஐஏஎஸ்) பேஸ்புக் பக்கம் செயல்படுத்தப்பட்டு அதன் மூலமாக அரசு உயர் அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் பெயரில் தொடர்பு கொள்வதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளது.

எனவே மேற்கண்ட பி.ரத்தினசாமி ஐஏஏஸ் என்ற பேஸ்புக் பக்கத்தினை பின்தொடர வேண்டாம் எனவும், அவற்றின் மூலமாக பொய்யான அழைப்புகள் வந்தால் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம் அழைப்புகள் வந்தால் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் கலெக்டர் படத்துடன் பெயரிட்ட பொய்யான பேஸ்புக் பக்கத்தில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Facebook ,Ariyalur Collector ,Ariyalur ,District Collector ,Rathinasamy ,District ,Collector ,Twitter ,Instagram ,Tamil Nadu government.… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...