×

அரியலூரில் ஜூலை 9ல் பொது வேலை நிறுத்தம்

 

அரியலூர், ஜூன் 30: அரியலூர் சிஐடியு சங்க அலுவகத்தில் சிஐடியு மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொறுப்பாளர் ரெங்கராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வேலை சம்மந்தமாக மாவட்ட செயலாளர் துரைசாமி பேசினார். அப்போது, ஜூலை 9-ந் தேதி மாவட்ட முழுவதும் அனைத்து சங்கம் சார்பாக 650பேர் மறியலில் கலந்துகொள்வது, பொது வேலைநிறுத்தை வெற்றிபெற வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், மாவட்ட மாநாடு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவது, பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் மாவட்ட பேரவை ஜூலை மாத்திற்குள் நடத்தி முடிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் ஜூலை 9ல் பொது வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : strike ,Ariyalur ,CITU ,committee ,Krishnan ,Renkarajan ,District secretary ,Duraisamy ,Dinakaran ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...