×

அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், பிப்.21: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரியலூர் கோட்டம் சார்பில் இன்று (21ம் தேதி) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் தலைமையில். அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இக்கோட்ட மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன் அடைந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்….

The post அரியலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...