×

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த காலத்தை குறைக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2,200 அரசுசாரா முதுநிலை மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது, கொரோனா தொற்று காரணமாக, அரசு சாரா முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி காலத்தை, மேலும் ஒரு மாதத்திற்கு, மருத்துவ கல்வி இயக்ககம் நீட்டித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அரசு சாரா முதுநிலை மருத்துவ மாணவர்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:அரசு மருத்துவ கல்லூரியில், 2018ம் ஆண்டு சேர்ந்த அரசு சாரா மருத்துவ மாணவர்களின் படிப்பு மற்றும் பயிற்சி காலம், இந்தாண்டு மே 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிகளுக்காக, ஒருமாதம் பயிற்சி நீட்டிக்கப்பட்டுள்து. அதற்கு பதிலாக, கொரோனா மருத்துவ அதிகாரிகளாக எங்களை நியமிக்கலாம். தொடர்ந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான ஊதியமும் வழங்க வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகாலம் கட்டாயம் பணியாற்றும் ஒப்பந்த காலத்தை, ஒரு ஆண்டாக குறைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த காலத்தை குறைக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED உதவித் தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கு...