×

மலேசியா, ஆசியா பசிபிக் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க குளோபல் டாக்டர்ஸ் மருத்துவ நிறுவனத்துடன் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை ஒப்பந்தம்

தாம்பரம்: குளோபல் டாக்டர்ஸ் அலையன்ஸின் ஒரு அங்கமாக குளோபல் டாக்டர்ஸ் – மலேசியா என்ற அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை நேற்று கையெழுத்திட்டது. குளோபல் டாக்டர்ஸ் மருத்துவ நிறுவனத்தின் செயலாக்க தலைவர் டத்தோ டாக்டர் ஷரிபா பவுசியா அல்ஹாப்ஷி, மருத்துவம் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நவீந்திரா நாகேஸ்வரன், எஸ்ஆர்எம் குழுமத்தை சேர்ந்த டாக்டர் மைதிலி, டாக்டர் சந்திரசேகரன் ஆகியோரின் முன்னிலையில் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம், மலேசியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள நோயாளிகளுக்கு சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் இயங்கிவரும் பல்வேறு சிறப்புத் துறைகளில் சிகிச்சையை வழங்கப்படும். குளோபல் டாக்டர்ஸ் அலையன்ஸ் என்பது, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜப்பான், துருக்கி, சீனா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் சார்பு மருத்துவ மையங்களின் வளர்ந்து வரும் ஒரு கூட்டமைப்பாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை, குளோபல் டாக்டர்ஸ் மருத்துவ நிறுவன நோயாளிகளுக்கு தொலைதொடர்பு வழியாக மருத்துவ ஆலோசனையை வழங்குவதுடன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை உறுப்பினர்கள் தங்களது மருத்துவ அறிவையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ளும்.

இந்த மருத்துவமனை, முக்கியமாக இதய நலம் மற்றும் இதய அறுவைசிகிச்சை, நரம்பியல், இரைப்பை குடலியல், எலும்பியல் போன்ற துறைகளில் சிகிச்சை பெறுவதற்காக குளோபல் டாக்டர்ஸ் அமைப்பின் நோயாளிகளும், மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post மலேசியா, ஆசியா பசிபிக் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க குளோபல் டாக்டர்ஸ் மருத்துவ நிறுவனத்துடன் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : SRM Global Hospital ,Global Doctors Medical Company ,Malaysia ,Asia Pacific ,THAMPARAM ,Global Doctors ,Global Doctors Alliance ,Datuk Dr. ,Sharifa Baucia ,Chief Operating Officer ,Dinakaran ,
× RELATED கால்வாய் குழிக்குள் விழுந்த இந்திய...