×

தாம்பரம்-திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவில்லா மெமு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாம்பரம்-திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவில்லா மெமு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம்- திருச்சி இடையே (ரயில் எண் 06007) முன்பதிவில்லா மெமு ரயில், தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 6.40 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று திருச்சி- தாம்பரம் இடையே (ரயில் எண் 06008) முன்பதிவில்லா மெமு ரயில் திருச்சியில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5.50 மணிக்கு வந்தடையும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரம்-திருச்சி-தாம்பரம் இடையே முன்பதிவில்லா மெமு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MEMU ,Tambaram ,Tiruchi ,Southern Railway ,CHENNAI ,Tambaram- ,
× RELATED நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்...