×

அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது

சேலம், செப்.6: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் அரசு பொருட்காட்சி இன்று மாலை தொடங்குகிறது. பொருட்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர். தமிழகத்தில் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடக்கிறது. இதற்கான தொடக்கவிழா இன்று (6ம் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அரசு பொருட்காட்சியில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், சேலம் மாநகராட்சி உள்ளிட்ட 6 அரசு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரங்குகள் இடம்பெறுகிறது.

இதில், அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேளாண்மைத் துறை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி இடம்பெறுகிறது. நாள்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை ெதாடங்கும் பொருட்காட்சி, 45 நாட்கள் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : fair ,Salem ,government fair ,Salem Pudu ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டு இல்லை