×

அரசு கல்லூரி மாணவிகளுக்கு சுகாதார மேலாண்மை பயிற்சி

சாயல்குடி,நவ.22: முதுகுளத்தூரில் கல்லூரி மாணவிகளுக்கு சுகாதார மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுகாதார மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வளர் இளம் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சாப்பிட வேண்டிய சத்து உணவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது, முதுகுளத்தூர் வட்டார இயக்க மேலாளர் அரசகுமார், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அருள்தாஸ், ராமசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு கல்லூரி மாணவிகளுக்கு சுகாதார மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Govt College ,Sayalgudi ,Mudukulathur ,Tamil Nadu ,State Rural Livelihood Movement ,Mudugulathur Government Arts College ,Principal ,Pandimadevi ,
× RELATED ராமநாதபுரத்தில் கனமழை- 15 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்